கிருஷ்ணகிரி: பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

இதன் மூலம் கிருஷ்ணகிரியில் 2501 ஏக்கரும், தருமபுரியில் 1499 ஏக்கர் நிலங்களும் பாசனவசதி பெறும்.
கிருஷ்ணகிரி: பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து 13.02.2026 முதல் 12.06.2026 வரை மொத்தம் 120 நாட்களுக்கு, பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 42.00 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் 12 கிராமங்கள் மூலம் 2501 ஏக்கரும் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் 4 கிராமங்கள் மூலம் 1499 ஏக்கரும் மொத்தம் 16 கிராமங்கள் மூலம் 4000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com