கிருஷ்ணகிரி: குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது தவறி விழுந்து தொழிலாளி பலி

போலீசார் உயிரிழந்த தட்சிணாமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி: குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது தவறி விழுந்து தொழிலாளி பலி
தட்சிணாமூர்த்தி
Published on: 

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 55). இவர், இன்று (சனிக்கிழமை) அப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி ஒன்றைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து உயிரிழந்த தட்சிணாமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்திற்கான சரியான காரணம் மற்றும் பணியின் போது பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தனவா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X