முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு

சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு
முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு
Published on

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் குந்தவேல் முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல் சங்கராபுரம் பூட்டை சாலையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி, குளத்தூர் ஆறுமுகப்பெருமான், ராவத்தநல்லூர் சக்திமலை முருகன் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களிலும் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com