முருகன் கோவில்களில் கிருத்திகை பூஜை

முருகன் கோவில்களில் கிருத்திகை பூஜை நடந்தது.
முருகன் கோவில்களில் கிருத்திகை பூஜை
Published on

வெள்ளியணை அருகே உள்ள செல்லாண்டிபட்டி காவடிகளம் முருகன் கோவிலில் நேற்று கிருத்திகையை முன்னிட்டு முருகன் காவடிக்கு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்து சக்கரை பொங்கல், தேங்காய், பழம் படையலிட்டு தீபாராதணை காட்டி வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகன் காவடியை வழிபட்டனர்.

இதேபோல் காணியாளம்பட்டி காணிகளத்தூர் முருகன், வெள்ளியணை, ஜெகதாபி, மஞ்சாநாயக்கன்பட்டி உட்பட வெள்ளியணை சுற்று பகுதி குக்கிராமங்களில் உள்ள முருகன் கோவில்களிலும் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com