சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு

சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.
சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு
Published on

சங்கராபுரம், 

சங்கராபுரம் சன்னதி தெருவில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகையை யொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தேவபாண்டலம் குந்தவேல் முருகர், குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகபெருமான் கோவில், சங்கராபுரம் பூட்டை சாலை முருகன் கோவில், ராவத்தநல்லூர் சக்திமலை முருகன் கோவில் உள்பட சங்கராபுரம் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் கிருத்திகையை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com