கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை மரணம்

கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை மரணம் அடைந்தார்.
கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை மரணம்
Published on

சிவகாசி, 

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைப்பு செயலாளருமான கே.டி. ராஜேந்திரபாலாஜியின் தந்தை கே.தவசிலிங்க ஆசாரி (வயது 93). இவர் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக திருத்தங்கல் பாலாஜிநகரில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com