குடியாத்தம் தொகுதியில் 9,713 பெண் வாக்காளர்கள் அதிகம்

இறுதி வாக்காளர் பட்டியல்படி குடியாத்தம் தொகுதியில் 9,713 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
குடியாத்தம் தொகுதியில் 9,713 பெண் வாக்காளர்கள் அதிகம்
Published on

வேலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் படி குடியாத்தம் தொகுதியில் 1,40,642 ஆண் வாக்காளர்களும், 1,50,355 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 43 பேரும் என மொத்தம் 2,91,040 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 9,713 பேர் அதிகம் உள்ளனர்.

குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியபை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கும் நிகழ்ச்சி நேற்று குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. தாசில்தார் எஸ். விஜயகுமார் இறுதி வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் தேர்தல் துணை தாசில்தார் வாசுகி, குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், அ.தி.மு.க. நகர செயலாளர் ஜே.கே.என்.பழனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் துரை செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் பி.லோகேஷ்குமார், நகர மன்ற உறுப்பினர்கள் ஏ. தண்டபாணி, இந்துமதி கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com