தங்க பதக்கம் வென்ற பரமக்குடி மாணவிக்கு பாராட்டு

சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் தங்க பதக்கம் வென்ற பரமக்குடி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தங்க பதக்கம் வென்ற பரமக்குடி மாணவிக்கு பாராட்டு
Published on

பரமக்குடி, 

கர்நாடக மாநிலம் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் வேர்ல்டு யூனியன் சிலம்ப பெடரேஷன் சார்பில் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். இதில் பரமக்குடி ஐரா சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவி ஷிவானி முதல் பரிசு பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இந்த மாணவி முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 2023 பள்ளி பிரிவின் கீழ் ஒற்றைக்கம்பு பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் இரட்டைக் கம்பு, சுருள்வால் ஆகியவற்றில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். தற்போது மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி ஷிவானியையும், சிலம்பம் பயிற்சி மாஸ்டர் சுதர்சன் ஆகியோரை பள்ளி நிர்வாகிகளும், முக்கிய பிரமுகர்களும் பாராட்டி வாழ்த்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com