பெரியகுளம் மாணவிக்கு பாராட்டு

மாநில அளவிலான மெல்லிசை போட்டியில் வெற்றி பெற்ற பெரியகுளம் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
பெரியகுளம் மாணவிக்கு பாராட்டு
Published on

தேனி மாவட்ட அளவில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் கலை பண்பாட்டு திருவிழா தேனியில் நடந்தது. இதில் மெல்லிசை சம்பந்தமான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவிகள் பலர் பங்கேற்றனர். அதில் வயலின் இசை பிரிவில் பெரியகுளம் மேரி மாதா மெட்ரிக் பள்ளி பிளஸ்-1 மாணவி எஸ்.ரோநி மணித்ரா முதல் இடத்தைப் பிடித்தார். இதனைத் தொடர்ந்து நாமக்கல்லில் மாநில அளவிலான மெல்லிசை போட்டியில் வயலின் இசை பிரிவில் வெற்றி பெற்று 3-ம் இடத்தை பிடித்தார். அவருக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் 3-ம் இடத்தை பிடித்த மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com