பள்ளி கட்டிடங்களை சீரமைத்த முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு

பள்ளி கட்டிடங்களை சீரமைத்த முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பள்ளி கட்டிடங்களை சீரமைத்த முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு
Published on

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பழைய கட்டிடங்களின் தளம் ஆங்காங்கே உடைந்து காணப்பட்டது. அதில் விஷ பூச்சிகளும் காணப்பட்டது. மேலும் கட்டிடங்களின் சுவர்களில் விரிசல்களும் காணப்பட்டது. இவற்றை சரி செய்யும் வகையில் தலைமை ஆசிரியர் காந்திமதி தலைமையில் ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் முன்னாள் மாணவர்கள் சிலரை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் மாணவர்கள் நிதி உதவியுடன் பள்ளி கட்டிடங் களை சீரமைத்து வகுப்பறைகளில் தளம் பழுது நீக்கம் செய்யப்பட்டு, வகுப்பறைகளுக்கு வர்ணம் பூசப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com