மாணவிக்கு பாராட்டு

மாநில வூசூ குங்பூ போட்டியில் வெற்றி பெற்ற சுரண்டை பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.
மாணவிக்கு பாராட்டு
Published on

சுரண்டை:

2023-ம் ஆண்டுக்கான மாநில வூசூ குங்பூ சாம்பியன்ஷிப் போட்டிகள், திண்டிவனத்தில் நடந்தது. மாநிலம் முழுவதும் 800 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தென்காசி மாவட்ட வூசூ சங்கம் சார்பில் 21 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 9 பேர் பதக்கம் வென்றனர். சுரண்டையை சேர்ந்த பள்ளி மாணவி எஸ்.தனஷா மிராக்கிள் சப்-ஜூனியர் பிரிவில் 2 பிரிவு போட்டிகளில் கலந்துகொண்டு 2-வது இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை சுரண்டை எஸ்.வேலாயுத நாடார் சன்ஸ் உரிமையாளர் எஸ்.வி.கணேசன் பாராட்டினார். மாவட்ட தலைவர் எஸ்.வி.தர்மர், செயலாளர் எஸ்.சத்தியபீமன் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகி ஆர்.வி.ராமர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com