அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்த மாணவருக்கு பாராட்டு

அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்த மாணவரை அ.தி.மு.க.வினர் பாராட்டி உதவித் தொகை வழங்கினர்.
அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்த மாணவருக்கு பாராட்டு
Published on

நெல்லை அருகே சுத்தமல்லி இந்திரா நகரைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகன் கலைச்செல்வன். இவர் பேட்டையில் உள்ள காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்து, நீட் தேர்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. இதையடுத்து அ.தி.மு.க. நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா மாணவர் கலைச்செல்வனின் வீட்டுக்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து உதவித்தொகை வழங்கி பாராட்டினார்.

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாநகராட்சி கவுன்சிலர் சந்திரசேகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com