

குமரி,
கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு (வண்டி எண்: 12634) விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலானது கன்னியாகுமரியில் இருந்து தினமும் மாலை 6 மணிக்கு புறப்பட்டு, நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூருக்கு மறுநாள் காலை 06:35 மணிக்கு வந்து சேரும்.
இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய இந்த ரெயிலானது இன்று மட்டும் தாமதமாக புறப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. அதாவது 2 மணி 15 நிமிடங்கள் தாமதமாக இரவு 8.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து இந்த ரெயில் புறப்படும். இணைப்பு ரெயில் தாமதம் காரணமாக ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.