உலக கோப்பை கால்பந்து போட்டி:பிரபல வீரர்களின் 'கட்அவுட்' வைத்து குமரி மீனவர்கள் உற்சாகம்

உலக கோப்பை கால்பந்து போட்டியையொட்டி பிரபல வீரர்களின் ‘கட்அவுட்’ வைத்து குமரி மீனவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
உலக கோப்பை கால்பந்து போட்டி:பிரபல வீரர்களின் 'கட்அவுட்' வைத்து குமரி மீனவர்கள் உற்சாகம்
Published on

கொல்லங்கோடு:

2022-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. அதனை வரவேற்கும் விதமாக உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் பல விதங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் பலரும் கால்பந்தாட்ட போட்டியில் சிறந்து விளங்குவதோடு கால்பந்து வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட வீரர்களின் தீவிர ரசிகர்களாகவும் உள்ளனர். உலக கோப்பை போட்டியை கொண்டாடும் விதமாக தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சாலையின் இருபுறங்களிலும் கால்பந்தாட்ட தலைசிறந்த வீரர்களின் ஆள் உயர 'கட்அவுட்'களை வைத்துள்ளனர். இதனை ஒருசிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com