முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

நல்லம்பள்ளி அருகே முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
Published on

நல்லம்பள்ளி

நல்லம்பள்ளி அருகே தடங்கம் ஊராட்சி கக்கன்ஜிபுரம் பழையூர் கிராமத்தில் திருவிடத்து முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 10-ந் தேதி மூலவர் கண் திறப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து முளைப்பாரி மற்றும் பால்குடம் ஊர்வலம் நடந்தது. கணபதி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மூலவருக்கு அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று யாகசாலையில் இருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சாமிக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்கார சேவை, மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com