அங்காளபரமேஸ்வரி, மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அங்காளபரமேஸ்வரி, மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அங்காளபரமேஸ்வரி, மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Published on

ஆலங்குடி இந்திரா நகரில் அங்காளபரமேஸ்வரி, மாசாணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த மூன்று நாட்களாக கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நேற்று யாக சாலையில் கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவில் மூலஸ்தான விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com