விக்கிரவாண்டியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

விக்கிரவாண்டியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விக்கிரவாண்டியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
Published on

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி போக்குவரத்து போலீஸ் நிலைய வளாகத்தில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து முதல்கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் நேற்று 2-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி உள்ளிட்டவைகள் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com