காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பட்டிவீரன்பட்டியில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
Published on

பட்டிவீரன்பட்டி காளியம்மன், பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 18-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று 2-ம் கால யாக சாலை பூஜையில் வருண பூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமம் போன்றவை நடந்தது. தொடர்ந்து புண்ணிய கலசங்கள் கோவிலை வலம் வந்து, வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுரம், மூலஸ்தான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பரிவார தெய்வங்களான கன்னிமூல கணபதி, கருப்பசாமி ஆகிய கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவின்போது கருடன் வானில் வட்டமடித்ததைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய காளியம்மன், பகவதியம்மனை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் அழகர்சாமி, மாணிக்கவேல், குமரன், சண்முகவேல் மற்றும் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com