கும்பாபிஷேக விழா: திருச்செந்தூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு


கும்பாபிஷேக விழா: திருச்செந்தூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு
x

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் மீது புனித நீரை தெளிக்கும் டிரோன் தொழில்நுட்பத்தை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பார்வையிட்டார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 7ம்தேதி நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் திருச்செந்தூரில் முகாமிட்டு கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அவர் பக்தர்கள் மீது புனித நீரை தெளிப்பதற்கான டிரோன் தொழில்நுட்பத்தை பார்வையிட்டும், குடமுழுக்கு நிகழ்வை நேரலையில் காண்பதற்காக ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. (L.E.D.) திரைகளின் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தும் காவல் துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.

1 More update

Next Story