பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பொது வினியோக திட்டத்தில் சிறப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது.
பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
Published on

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பொது வினியோக திட்டத்தில் சிறப்பு முகாம் இன்று(சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயா சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவித்து தக்க நிவாரணம் பெறலாம். எனவே தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மனு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com