குரங்கணி காட்டுத்தீ சம்பவம்: மலையேறும் முடிவை கைவிட்டதனால் தப்பி பிழைத்த 3 பேர்

குரங்கணி காட்டுத்தீ நடந்த மலைப்பகுதியில் கடைசி நேரத்தில் மலையேறும் முடிவை கைவிட்ட 3 பேர் தப்பி பிழைத்துள்ளனர். #KuranganiForestFire #TheniCollector
குரங்கணி காட்டுத்தீ சம்பவம்: மலையேறும் முடிவை கைவிட்டதனால் தப்பி பிழைத்த 3 பேர்
Published on

தேனி,

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. சுற்றுலாவுக்காக இங்கு அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் நேற்று பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை மீட்க போர் கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உள்பட 27 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

குரங்கணி மலைப்பகுதியில் 24 பேருடன் ஒரு குழு மற்றும் 12 பேருடன் ஒரு குழு என இரண்டு குழுக்கள் மலையேறுவதற்காக சென்றுள்ளனர். 36 பேருடன் கூடுதலாக மலையேற முடிவு செய்த 3 பேர் பின்பு அந்த முடிவை கைவிட்டுள்ளனர்.

காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களில் 6 பேர் சென்னையை சேர்ந்த புனிதா, அருண், பிரேமலதா, சுபா, விபின், அகிலா என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று உயிரிழந்தவர்களில் 3 பேர் ஈரோட்டை சேர்ந்த விவேக், தமிழ்ச்செல்வி, விஜயா என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com