குரங்கணி தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

குரங்கணி தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து உள்ளது. #KuranganiForestFire
குரங்கணி தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு
Published on

சென்னை,

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ந் தேதி தீப்பிடித்தது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக் கொண்டனர். இவர்களில் பலர் உயிருடன் மீட்கப்பட்டனர். 9 பேர் சம்பவ இடத்திலேயே பிணமானார்கள். தீக்காயம் அடைந்தவர்கள், மதுரை, கோவை, சென்னை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுவேதா (28) சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதையடுத்து, குரங்கணி காட்டுத் தீயில் இறந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com