

சென்னை,
காவிரி விவகாரம் தொடர்பான தமிழ்நாடு அரசின் மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு.
காவிரி விவகாரத்தில் எத்தனை மனுதான் தாக்கல் செய்வீர்கள்? என கேள்வி எழுப்பியது. இந்தநிலையில் குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! முதல்-அமைச்சரின் பதில் என்ன? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள முதல்-அமைச்சரின் பதில் என்ன?
காவிரியில் 11 டிஎம்சி தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்!
🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்?
🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்?
🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது?
🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?
முதலமைச்சர் அவர்களே…
அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்!
விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்!