அரசுப் பேருந்துகள் பராமரிக்கப்படாததால் கொடூர விபத்துகள்: எல்.முருகன் கண்டனம்

அரசு பேருந்து எதிர்புறம் சென்ற வாகனங்கள் மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
 அரசுப் பேருந்துகள் பராமரிக்கப்படாததால் கொடூர  விபத்துகள்: எல்.முருகன் கண்டனம்
Published on

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சேலம் - உத்தமசோழபுரம் பகுதியில், தமிழ்நாடு அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பை உடைத்து எதிர்புறம் சென்ற வாகனங்கள் மீது அதிவேகமாக மோதியதில் 7 பேர் உயிரிழந்த செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,

விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததால் கொடூர விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஊழல் பெருகிய போலி திராவிட மாடல் ஆட்சியின் அவலம் இது. என தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com