

சென்னை,
பாஜக மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சமீபத்தில், தமிழகத்திற்குத் தேவையான கூடுதல் ரெயில்களை இயக்குவது குறித்தும், சில ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் கூடுதல் நிறுத்தங்களை அறிவிப்பது தொடர்பாகவும், மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்திருந்தேன்.
அதன்படி,
1) பாலக்காடு- பொள்ளாச்சி மெமு (மின்சாரப் பயணிகள் ரெயில்கள்)
2) மயிலாடுதுறை- காரைக்குடி பயணிகள் ரெயில்
3) போத்தனூர்- தன்பாத் அம்ரித் பாரத் விரைவு ரெயில்
4) திருநெல்வேலி- மங்களூரு விரைவு ரெயில், ஆகிய நான்கு புதிய ரெயில்கள் இயக்கப்படவுள்ளன.
மேலும்,
1) மங்களூரு சென்ட்ரல்- ராமேஸ்வரம் விரைவு ரெயில் திரூர், உடுமலைப்பேட்டை, பரமக்குடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்
2) தாம்பரம்- ராமேஸ்வரம் விரைவு ரெயில் பண்ருட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
மேலும்,
1) திருச்சி- காரைக்குடி பயணிகள் ரெயில், வாரத்தில் அனைத்து நாட்களும் இயக்கப்படும்.
2) எம்ஜிஆர் சென்ட்ரல்- போடி விரைவு ரெயில் வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் நலனுக்காக கூடுதல் ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ள நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கும் தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.