

சென்னை,
தமிழகத்தின் 13-ஆவது முதல்-அமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்-அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்தநிலையில் சென்னை தலைமைச்செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய் முறையாக பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து அரசின் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
மத்திய இணை மந்திரி எல்.முருகன் எக்ஸ் பதிவில் தெரிவித்தாவது:-
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கும் , அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக மக்களின் நலனையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் முன்னிறுத்தி சிறப்பாக செயலாற்ற வாழ்த்துகிறேன்.
இதில் அவ்வாறு கூறியுள்ளார்.