கூலித்தொழிலாளி கைது

வியாபாரியை தாக்கிய கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கூலித்தொழிலாளி கைது
Published on

பழனி அருகே உள்ள புதுஆயக்குடி பகுதியை சேர்ந்தவர் முகமதுஅலி (வயது 60). இவர், அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாண்டியராஜன் (31). இவர், முகமதுஅலியின் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டார்.

மேலும் பாண்டியராஜன், முகமதுஅலியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆயக்குடி பேலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com