காஞ்சீபுரம் அருகே ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

காஞ்சீபுரம் அருகே ஆற்றில் தேங்கி நின்ற தண்ணீரில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரம் அருகே ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
Published on

கூலித்தொழிலாளி

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா ஆதவப்பாக்கம் அரசமர தெருவை சேர்ந்தவர் ராஜவேலு (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கூலி வேலை செய்து வந்த ராஜவேலுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து மாகரல் கிராமத்தில் நடைபெற்ற மயானகொள்ளை திருவிழாவுக்கு சென்றார்.

சாவு

பின்னர் அங்கு இருந்து வரும் போது செய்யாற்றில் தேங்கி நின்ற தண்ணீரில் தவறி விழுந்து இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் மாகரல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com