பிரம்மதேசம் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

பிரம்மதேசம் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.
பிரம்மதேசம் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி
Published on

பிரம்மதேசம், 

விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அடுத்த ஏந்தூர் பழைய காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மகன் சம்பத்குமார் (வயது 37). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினரிடம், அதே கிராமத்தில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க செல்வதாக கூறிச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன், அக்கிராம இளைஞர்களுடன் சேர்ந்து ஏரியில் இறங்கி தேடினர். அப்போது, சம்பத்குமார் பிணமாக மீட்கப்பட்டார். அவர் மீன் பிடிக்க ஆழமான பகுதிக்கு சென்றபோது, தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதனிடையே சம்பத்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com