தூத்துக்குடியில் தொழிலாளிக்கு கத்திக்குத்து:4 பேர் அதிரடி கைது

தூத்துக்குடியில் தொழிலாளிக்கு கத்தியால் குத்திய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தூத்துக்குடியில் தொழிலாளிக்கு கத்திக்குத்து:4 பேர் அதிரடி கைது
Published on

தொழிலாளிக்கு கத்திக்குத்து

தூத்துக்குடி அருகே உள்ள மீளவிட்டானை சேர்ந்த செல்வராஜ் மகன் தங்கமாரியப்பன் (வயது 32). தொழிலாளி. இவர் கடந்த 16-ந்தேதி மீளவிட்டான் நடுத்தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த மீளவிட்டானை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் பாலசிங் (42), ஜெகநாதன் மகன்கள் ஜெகதீஷ் (22), ஜெபஸ்டின் (23), முத்துராஜ் மகன் கவுதம் (25) ஆகியோர் தங்கமாரியப்பனை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். பின்னர் திடீரென்று அவரை 4 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய தங்கமாரியப்பன் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

4 பேர் கைது

இதன் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குபதிவு செய்து பாலசிங், ஜெகதீஷ், ஜெபஸ்டின் மற்றும் கவுதம் ஆகிய 4 பேரையும் கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட பாலசிங் மீது ஏற்கனவே சிப்காட் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com