கூலித்தொழிலாளி தற்கொலை

குடும்ப பிரச்சினை காரணமாக கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கூலித்தொழிலாளி தற்கொலை
Published on

மதுரை மாவட்டம் வெள்ளியங்குன்றத்தை சேர்ந்தவர் அடைக்கண் (வயது 55). கூலித்தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர், அப்பன் திருப்பதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் அழகர்கோவில் பழமுதிர்சோலை பகுதியில், ஒருவர் இறந்து கிடப்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர், ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போன அடைக்கண் என்று தெரியவந்தது. மேலும் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com