கூலிதொழிலாளி தற்கொலை

மகனுக்கு திருமணம் தாமதம் ஆனதால் கூலித்தொழிலாளி தற்கொலை செய்தார்.
கூலிதொழிலாளி தற்கொலை
Published on

சாணார்பட்டி அருகே உள்ள மேட்டுக்கடையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). கூலிதொழிலாளி. இவர், தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து மனக்கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஆறுமுகம் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com