

காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம், கொட்டாவூரை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் பிரசாந்த் (வயது 38), கூலித் தொழிலாளி. இன்ஸ்டாகிராமில் இவருக்கும். கிருஷ்ணகிரியை சேர்ந்த திருமணமான 33 வயது பெண்ணிற்கும் பழக்கம் ' ஏற்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 20-ந் தேதி இருவரும் பெரியாம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் சந்தித்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது நாகராஜ் தனக்கு பணம் தேவைப்படுகிறது என அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் தனது கழுத்தில் இருந்த தாலி குண்டு மணி தங்கத்தை அடகு வைத்து உன் பணத்தேவையை பூர்த்தி செய்து கொள் என கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கடந்த 7-ந் தேதி அந்த பெண்ணை பெரியாம்பட்டிக்கு வரவழைத்த பிரசாந்த். மேலும் ரூ.20 ஆயிரம் தேவைப்படுகிறது. உன் தங்கத்தோடை அடகு வைத்து பணம் கொண்டு வா என கூறி உள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த பிரசாந்த், அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். மேலும் 'பணம் கொடுக்கவில்லை என்றால், நீயும், நானும் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோவை, சமூக வலைத்த எங்களில் பரப்பிவிடுவேன்' என மிரட்டி உள்ளார்.
ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த அந்த பெண் வேறு வழியின்றி காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், பிரசாந்த் மீது வழக்குப்பதிந்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் பெரியாம்பட்டி டாஸ்மாக் அருகே அவர் இருப்பதாக வந்த தக வலின் பெயரில் காரிமங்கலம் போலீசார் விரைந்து சென்று பிரசாந்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த தங்க தாலியையும் மீட்டனர்.
பெண்கள் சமூகவலைதளங்களில் புதிய நபர்களுடன் பழகும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இதுபோன்ற மிரட்டல்கள் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையை அணுக வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.