தீயில் தவறி விழுந்து மூதாட்டி சாவு

தீயில் தவறி விழுந்து மூதாட்டி இறந்தார்.
தீயில் தவறி விழுந்து மூதாட்டி சாவு
Published on

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள முல்லக்குடி மேல தெருவில் வசித்து வருபவர் சங்கரம்மாள் (வயது72). மண்பாண்ட தொழில் செய்து வந்தார். நேற்று மாலை இவர் வீட்டின் பின்புறம் இருந்த குப்பைகளை சுத்தம் செய்து தீயிட்டு கொளுத்தி உள்ளார். அப்போது திடீரென மயக்கம் வந்து தீயில் விழுந்தார். இதில் உடல் கருகி அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த நிலையில் அவருடைய மகள் அம்சவல்லி (42) அங்கு சென்று பார்த்தபோது சங்கரம்மாள் தீயில் உடல் கருகி இறந்தது தெரியவந்தது. இது குறித்து அம்சவல்லி திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com