தீயில் கருகி மூதாட்டி சாவு

தீயில் கருகி மூதாட்டி இறந்தார்.
தீயில் கருகி மூதாட்டி சாவு
Published on

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள புத்தூர் கீழத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி கன்னியம்மாள் (வயது78). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய சேலையில் தீப்பிடித்தது. தீ வேகமாக பரவியதில் உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அம்மாப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கன்னியம்மாளின் மகன் ராஜ்குமார் (55) கொடுத்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Daily Thanthi
www.dailythanthi.com