பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
Published on

போளூர்

பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

போளூர் தாலுகா செங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 49) சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவரை போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் கைது செய்தார்.

பச்சையம்மாள் தொடர்ந்து குற்ற செயல் ஈடுபடாமல் இருப்பதற்கு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். அதை ஏற்று பச்யைம்மாளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com