அங்காள பரமேஸ்வரி கோவிலில் லட்சார்ச்சனை விழா

ராஜாளிகாடு அங்காள பரமேஸ்வரி கோவிலில் லட்சார்ச்சனை விழா நடந்தது.
அங்காள பரமேஸ்வரி கோவிலில் லட்சார்ச்சனை விழா
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சி ராஜாளிகாடு அங்காளபரமேஸ்வரி கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் உலக நன்மை வேண்டியும். விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய் இன்றி வாழவும் லட்சார்ச்சனை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று லட்சார்ச்சனை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர் இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com