ஆடி மாத பவுர்ணமியையொட்டி பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை

ஆடி மாத பவுர்ணமியையொட்டி பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது.
ஆடி மாத பவுர்ணமியையொட்டி பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை
Published on

பெரியபாளையம்,

எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பவானி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா 14 வாரங்கள் நடைபெறும்.

இந்நிலையில், ஆடி மாத பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் கோவிலில் விளக்கு பூஜை மற்றும் தேரில் பவானி அம்மன் உற்சவர் வெள்ளி கவசத்தில் பிரகார புறப்பாடு நடைபெற்றது. இதைதொடர்ந்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 108 பெண்கள் கலந்து கொண்டனர். பூஜையின் நிறைவாக அனைத்து பெண் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com