கனமழையால் மண்சரிவு; நீலகிரி மலை ரெயில் சேவை இன்றும் ரத்து


கனமழையால் மண்சரிவு; நீலகிரி மலை ரெயில் சேவை இன்றும் ரத்து
x

வடகிழக்கு பருவமழையால் ஊட்டி மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது

நீலகிரி,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. மேலும், அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கோத்தகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் 13.7 செமீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையால் ஊட்டி மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. கல்லாறு, ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டதால், ஊட்டி மலை ரெயில் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது. மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்றும் மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story