மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள்: தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை


மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள்: தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 25 Jan 2026 8:38 AM IST (Updated: 25 Jan 2026 9:06 AM IST)
t-max-icont-min-icon

தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை

இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் ஈந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து - நடராசன் நினைவிடத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு நிற உடையில் வருகை தந்தார்.

அங்கு அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்று அவர் முழக்கமிட்டார். அவருடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து எழும்பூரில் உள்ள தாளமுத்து - நடராசன் மாளிகை வளாகத்தில் அவர்களது திருவுருவச் சிலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

1 More update

Next Story