விடுபட்ட நபர்களுக்கு இறுதி வாய்ப்பு; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 26-ந்தேதி கடைசி நாள்

படிவம்-6 மூலமாகவோ அல்லது இணையவழி சேவை மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுபட்ட நபர்களுக்கு இறுதி வாய்ப்பு; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 26-ந்தேதி கடைசி நாள்
Published on

சென்னை,

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடக்கிறது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தகுதி வாய்ந்த குடிமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், விடுபட்ட நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க மார்ச் 26-ந்தேதி கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெயர் இடம்பெறாதவர்கள், படிவம்-6 மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது இணையவழி சேவை மூலமோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால், பட்டியலில் பெயர் இடம்பெறாத நபர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com