கொல்லிமலை மாதிரி பள்ளியில்சமையலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்31-ந் தேதி கடைசி நாள்

கொல்லிமலை மாதிரி பள்ளியில்சமையலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்31-ந் தேதி கடைசி நாள்
Published on

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொல்லிமலை தாலுகா செங்கரை, ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதிக்கு சமையல் செய்ய பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி 2 சமையலர் பணியிடங்களுக்கு ஆண்களும், 3 உதவி சமையலர் பணியிடங்களுக்கு பெண்களும், ஒரு துப்புரவாளர் பணிக்கு இருபாலரும் என 6 பணியிடங்களுக்கு சமையல் கலை தெரிந்த பழங்குடியினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது உச்ச வரம்பு 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் சமையலர் மற்றும் உதவி சமையலர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வீதமும், துப்புரவாளருக்கு ரூ.5,200-ம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

மேற்காணும் பணியிடங்களுக்கு விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்குள் திட்ட அலுவலகம், பழங்குடியினர் நலம், கொல்லிமலை தாசில்தார் அலுவலகம் வளாகம் அல்லது தலைமை ஆசிரியர், ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, செங்கரை, கொல்லிமலை தாலுகா என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com