கடைசி நேரத்தில் கூட்டணி கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 173 தொகுதிகளில் போட்டி

கடைசி நேரத்தில் கூட்டணி கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 173 தொகுதிகளில் போட்டி 187 இடங்களில் ‘உதயசூரியன்' சின்னம் களம் காண்கிறது.
கடைசி நேரத்தில் கூட்டணி கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 173 தொகுதிகளில் போட்டி
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் என கூட்டணி கட்சிகளுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் தி.மு.க. கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு நேற்று ஒரு தொகுதி வழங்கப்பட்டது. இதன் மூலம் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 61 ஆனது. இதன் காரணமாக தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 174 லிருந்து 173 ஆக குறைந்தது. தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 6 இடங்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு வழங்கப்பட்ட 3 இடங்கள், மனிதநேய மக்கள் கட்சி (2 தொகுதியில் ஒரு இடத்தில்), தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு வழங்கப்பட்ட தலா ஒரு இடங்கள் என 14 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் தான் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

எனவே தி.மு.க.வின் உதயசூரியன் 187 தொகுதிகளில் களம் காண உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com