‘கோச்சடையான்’ கடன் விவகாரம்: லதா ரஜினிகாந்துக்கு தொடர்பு இல்லை பட நிறுவனம் அறிக்கை

‘‘கோச்சடையான் பட வேலைகளுக்காக அட்–ப்யூரோ விளம்பர நிறுவனத்திடம் இருந்து மீடியா ஒன் நிறுவனம் ரூ.20 கோடி கடன் பெற்றது.
‘கோச்சடையான்’ கடன் விவகாரம்: லதா ரஜினிகாந்துக்கு தொடர்பு இல்லை பட நிறுவனம் அறிக்கை
Published on

சென்னை,

ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் அனிமேஷன் படத்தை தயாரித்த மீடியாஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோச்சடையான் பட வேலைகளுக்காக அட்ப்யூரோ விளம்பர நிறுவனத்திடம் இருந்து மீடியா ஒன் நிறுவனம் ரூ.20 கோடி கடன் பெற்றது. கோச்சடையான் படத்தை தமிழ் நாட்டில் வெளியிட அட்ப்யூரோ நிறுவனத்துக்கு உரிமையும் வழங்கப்பட்டது. உடன்படிக்கையின்படி நிர்ணயிக்கப்பட்ட ரூ.20 கோடியில் ரூ.10 கோடி மட்டுமே முன்பணமாக கொடுத்ததால் கோச்சடையான் வெளியாவதில் பல வாரங்கள் தாமதம் ஏற்பட்டது.

ரூ.10 கோடி கடன் தொகையில் ரூ.9.2 கோடியை மீடியா ஒன் நிறுவனம் கட்டி உள்ளது. மேலும் ரூ.80 லட்சத்தை செலுத்தவும் தயாராக உள்ளது. உடன்படிக்கையில் இல்லாத வட்டியையும் செலுத்தும்படி கோரியதால் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கோர்ட்டில் வழக்கும் உள்ளது.

லதா ரஜினிகாந்துக்கு இந்த பிரச்சினையில் எந்த தொடர்பும் இல்லை. மீடியா ஒன் நிறுவனத்தில் அவர் பங்குதாரராகவும் இல்லை. எனவே லதா ரஜினிகாந்துக்கு எதிராக அவதூறுகள் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com