மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் நினைவு சதுக்கம்" - மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு

சென்னை மாமன்ற கூட்டத்தில் புதிதாக 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் நினைவு சதுக்கம்" - மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முக்கியமாக 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

இதில் முக்கியமாக, மறைந்த பிரபல இயக்குநர் கே.பாலச்சந்தர் நினைவாக மயிலாப்பூரில் காவேரி மருத்துவமனை அருகில் நினைவு சதுக்கம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

ஏற்கனவே மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, அவ்வை சண்முகம் சாலை வி.பி.ராமன் சாலையாகவும், மந்தைவெளி மேற்குவட்ட சாலைக்கு மறைந்த பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் பெயரும் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com