திருநெல்வேலி மண்டல மின்பகிர்மான கழக தலைமை பொறியாளராக லதா பொறுப்பேற்றார்

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளராக லதா பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருநெல்வேலி மண்டல மின்பகிர்மான கழக தலைமை பொறியாளராக லதா பொறுப்பேற்றார்
Published on

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (Tamil Nadu Power Distribution Corporation Limited (TNPDCL)) திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளராக விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளராக பணிபுரிந்து வந்த லதா, பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி மண்டலத்தின் புதிய தலைமை பொறியாளராக திருநெல்வேலி தியாகராஜநகரில் உள்ள மண்டல தலைமை அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி மற்றும் திருநெல்வேலி மண்டலத்திற்க்கு உட்பட்ட பொறியாளர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் நேரில் சந்தித்தனர்.

திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளராக இதுவரை பணி புரிந்து வந்த சந்திரசேகரன் இடமாற்றம் காரணமாக மரபுசாரா எரிசக்தி துறை, சென்னை , தலைமை பொறியாளராக பொறுப்பு ஏற்க உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com