கால்நடை மருத்துவம் குறித்த விபரங்களை பெற பிரத்யேக செயலி தொடக்கம்

கால்நடை தொழில் முனைவோருக்காக 'கால்நடை மருத்துவர் செயலி'யை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
கால்நடை மருத்துவம் குறித்த விபரங்களை பெற பிரத்யேக செயலி தொடக்கம்
Published on

சென்னை:

சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் விவசாயி, செல்லப்பிராணி உரிமையாளர்கள் மற்றும் கால்நடை தொழில் முனைவோருக்காக கால்நடை மருத்துவர் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கால்நடை மருத்துவர் செயலியை தொடங்கி வைத்தார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக கால்நடை மருத்துவம் குறித்த விபரங்களை பெற கால்நடை மருத்துவர் செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்நடை மருத்துவர் குறித்த விவரங்களை அறிந்து தங்களின் தேவைக்கேற்ப தொடர்பு கொள்ளலாம். காணொளி தொடர்பு மூலமாக முதலுதவி மருத்துவர் அறிவுரை பெற முடியும்.

அரசின் சிறப்புத் திட்டங்கள், அரசாணைகள், வழிகாட்டு நெறிமுறைகள் பராமரிப்பு மற்றும் பண்ணை அமைத்தல் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். 3,360 கால்நடை மருத்துவ பட்டதாரிகள் இந்தச் செயலி மூலம் இணைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com