போலீஸ் நிலையங்களில் சைபர் பிரிவு தொடக்கம்

போலீஸ் நிலையங்களில் சைபர் பிரிவு தொடங்கப்பட்டது.
போலீஸ் நிலையங்களில் சைபர் பிரிவு தொடக்கம்
Published on

அரியலூர்:

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மேற்பார்வையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சைபர் பிரிவு(செல்) தொடங்கப்பட்டது. அதில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில், சைபர் கிரைம் உதவி அலுவலர்களாக முதல் நிலை போலீஸ்காரர் மற்றும் ஒரு போலீஸ்காரர் ஆகியோர் கொண்ட 54 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில், துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் முன்னிலையில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் புகார் அளிப்பது தொடர்பான சிறப்பு வகுப்பு மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா இணைய குற்றம் தொடர்பாக போலீஸ் நிலையங்களை அணுகும் நபர்கள் உடனடியாக www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் பதிவு செய்யவும், பணம் இழப்பு தொடர்பான புகார்களை சைபர் கிரைமின் 1930 என்ற இலவச உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com