பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு தொடக்கம்

திருத்துறைப்பூண்டியில் பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு தொடக்கம்
பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு தொடக்கம்
Published on

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் பாலம் சேவை நிறுவனம் சார்பில் பேரிடர் மீட்புக்குழு தொடக்க நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடந்தது. மீட்பு குழுவை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தொடங்கி வைத்தார்.மாவட்ட பேரிடர் ஆலோசனைக்குழு உறுப்பினர் செல்வகணபதி பேரிடர் குறித்து பேசினார். அப்போது அவர், மாவட்டம் முழுவதும் மீட்புக்குழு அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இணைந்து கொள்ளலாம் என கூறினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சக்திவேல், ரமேஷ்குமார், வாசிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி சரவணன், முன்கள மீட்பாளர் கண்ணதாசன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக பேரிடர் உபகரணங்களின் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com