விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கறிஞர் கைது: கார், நகைகள் பறிமுதல்

சாத்தான்குளம் பகுதியில் ஒரு விவசாயி தனது தோட்டத்தில் இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி நகையைப் பறித்துச் சென்றனர்.
விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கறிஞர் கைது: கார், நகைகள் பறிமுதல்
Published on

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே சவேரியார்புரத்தைச் சேர்ந்த நெல்சன்டேவிட் (வயது 65), விவசாயி ஆவார். இவர் கடந்த ஜூலை 23ம் தேதி தனது தோட்டத்தில் இருந்த போது, அவரை காரில் வந்த மர்ம நபர்கள் தாக்கி 9.5 சவரன் நகைகளைப் பறித்துச் சென்றனர். இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் மகன் கிறிஸ்டோபர் என்பவர் திடீரென மாயமானதாகத் தெரியவந்தது. வள்ளியூரில் பதுங்கியிருந்த அவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது, தான் திருநெல்வேலியில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருவதாகவும், மது போதையில் தனது நண்பருடன் சென்று நெல்சன்டேவிட்டை தாக்கி நகையைப் பறித்ததாகவும் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அவரை போலீசார் கைது செய்து கார், நகைகளைப் பறிமுதல் செய்தனர். அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com